Monday, February 06, 2006

கவி11:ஒரு கிராமத்துக் காதல்...

கார்கில் போர் செய்திகள் வந்துக் கொண்டிருந்த நேரத்தில் எழுதிய கவிதை... கொஞ்சம் பெரியக் கவிதை...



ஒசந்தப் பனை மரத்தடியிலே...
ஒத்த உசுரா நிக்குறேனே சின்னப்புள்ள..

பட்டாளம்ப் போன மாமன்
பட்டாடை கொண்டு வருவான் என்று..
பாதையோரம் விழி பதிச்சு..
பச்சைக் கிளி ஒண்ணு காத்து நிக்குது....

கால்சட்டைப் போட்ட வயசுல்ல...
காதல் கடிதாசுக் கொடுத்து...
பாவி மனசைக் கலைச்சவரே...
பஞ்ச வர்ணமாப் பதிஞ்சவரே..
நெஞ்சமெல்லாம் பொங்குதய்யா
நித்தம் நித்தம் உன் நினைப்பில்...

கண்ணு ரெண்டும் நவாப்பழம்
கன்னம் ரெண்டும் ஆப்பிள் பழம்
கடிச்சுத் தின்னவா கண்மணியே
காதோரம் காதல் சொன்னவரே
உள்ளத்தின் இடுக்கில் எல்லாம்
உன் குரல் தான் கேட்குதய்யா...
உதட்டோடு விரலை உரசி...
உள்ளுக்குள் தீ வைத்தீரே..
இடுப்பின் இடைவெளியில்...
இதயத்தை சொருகிவிட்டுப் போனீரே..
மாராப்பை விலக்காம..
மனசை மட்டும் களவாடிப் போனீரே..
முகத்தோரம் குத்துதய்யா..
முள் முள்ளா உன் மீசை முடி
மூஞ்சுக்குள்ளே சுத்துதய்யா உன்
மூச்சுக் காத்தின் அனல் வீச்சு...
தலை முடிக்கு நாளாச்சு
தண்ணி வச்சு..
கோதிவிட்ட உன் கைவாசம்
கலந்திருக்கே என் கேசத்திலே..
ஓடக் கரையிலே வச்சு..
ஒத்தை முத்தம் நீ கேட்க..
வெக்கத்திலே நான் ஓட...
விழ போனவளைத் தாங்கி நீ பிடிக்க...
இப்பவும் செவந்துப் போகுது அந்த இடம்...
இனிப்பான் உன் நினைப்பு தான் காரணம்.

போருக்குப் போனவரே
போகையிலே சொன்னதென்ன?
காத்திரு செல்லக் கிளி...
கல்யாண வேளை வரும்..
கழுத்துக்கு தாலியும் மாலையும்
கையோடு கொண்டு வருவேன் நிச்சயமா...

சொன்னதைச் செய்யும் சொக்கத்தங்கமே...
சொந்தமெல்லாம் எதிர்பார்த்திருக்க...
ஊரு மொத்தமும் கூடியிருக்க
உனக்காக மட்டுமே
உசுரைப் புடிச்சிகிட்டு நான் இருக்க..
வானம் மழையைப் பூவாத் தூவ..
வந்தாயே ராசா...
மார் மேலத் தேசக்கொடி தாங்கி..
மாலையோட மதுரை வீரனாய்..
மண்ணுக்காகப் போராடிச் செயிச்சுப்புட்டு
மரணத்தேவன் கிட்டேத் தோத்தீராம்
சொன்னாங்க...
சொல்லிக்கிட்டாங்க..
தூரப்பயணம்...
துணை விட்டுப் போனவரே...

இங்கே...இப்போ....
ஓசந்தப் பனைமரத்தடியிலே...
ஒத்த உசுரா நிக்குறேனே சின்னப்புள்ள...

11 comments:

premkalvettu said...

R u from a place, in and around nagercoil or Tirunelveli !!???

Unknown said...

Dear Kalvettu,

My parents are from thirunelveli..
I have my roots there
I was brought up completely in Chennai

Thanks for your enquiries

premkalvettu said...

i just had the doubt by the selection of words u use...
thanks

sathesh said...

ரொம்ப நல்லாயிருக்கு தேவ்

Unknown said...

கல்வெட்டு,

அறிந்தோ அறியாமலே நம் வேர்கள் நம்மில் வெளிபடுவது தவிர்க்க முடியாது போலிருக்கு...:)

Unknown said...

பாழ்... உங்களுக்குன்னு ஒரு நன்றியைத் தனியா ஒதுக்கி வச்சுரப் போறேன்...
உங்க சமீபத்திய கடவுள் பற்றிய கவிதை அருமையிலும் அருமை

Unknown said...

Dreamz,

Yes indeed we smile because of the sacrifices of those soldiers at the border...

True.. let this be my tribute to one and all of those brave soldiers...

will try a better one next one time

Anonymous said...

pls tell me the font name to read properly

Unknown said...

Dear Anony and Blog-guy,

This blog is in tamil. use ur browsers view options. set ur encoding to Unicode and try reading.

cheers

Anonymous said...

Padithu muditha Pothu imaiyoram Neerthuli.Kargilin Valiyai Ninaivu Paduthiya Kavithai.

Aama Dev,Ungalukku Poorveegam Thirunelveliyaa!!!Namma oorkarar. Athuthanae Parthaen!Eatho oru Pasam ilukkuthaennu. Correctaa Entha Oor Sollunga.

அன்புடன்
துபாய் ராஜா.

Unknown said...

//Padithu muditha Pothu imaiyoram Neerthuli.Kargilin Valiyai Ninaivu Paduthiya Kavithai.//

நன்றி துபாய் ராஜா.

//Aama Dev,Ungalukku Poorveegam Thirunelveliyaa!!!//

நமக்கு பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டம்ங்க. அதுவும் தெக்கத்திச் சீமை தானே.. என்ன நான் சொல்லுறது?

//Athuthanae Parthaen!Eatho oru Pasam ilukkuthaennu. Correctaa Entha Oor Sollunga.//

நெல்லைச் சீமை மண் வாசம் துபாயிலே நட்பினைப் பூக்கச் செய்யுதே...
நமக்கு கரெக்ட்டா ஊரு வந்து நாசரேத் பக்கம்....