Friday, February 17, 2006

கதை 6: ஒரு அம்மாவின் டைரிக் குறிப்பு

என் பெயர் என்ன... கடந்து வந்து காலங்களில் நான் மறந்துப் போன எத்தனையோ விஷயங்களில் என் பெயரும் ஒன்று...
அவசியம் உங்களுக்கு என் பெயர் தெரிய வேண்டுமானால் கொஞ்சம் பொறுங்கள்...
என்னைப் பற்றி சொல்ல என்ன இருக்கு..? என் உலகம் மிகவும் சின்னது. அதில் நானும்...என் இரண்டு தேவதைகளும் அடக்கம்... மூத்தவள் பெயர் ரியா...அடுத்தவள் பெயர் லயா...(எனக்குப் பிடித்தப் பெயர்). மூத்தவளுக்கு வயது 7, அடுத்தவளுக்கு வயது 6...
ரியா என்னுடைய நாடக ராணி... தொட்டதற்க்கெல்லாம் அழுது அடம் பிடித்து சாதிக்கும் குணம் கொண்டவள்...(அவங்க அப்பா மாதிரி).
லயா நிதானமானவள்... நல்லா சிரிப்பா...வேண்டியது கிடைக்காதப் போதும் அவக் கிட்ட இருந்து அந்த சிரிப்பு மறையாது... உலகம் என்னைக் காயப்படுத்தும் போது எல்லாம் எனக்கு மருந்துப் போடுறது லயாவோடச் சிரிப்பு தான்.
இந்த இரண்டு தேவதைகளும் தான் என்னோட ராஜகுமாரன் என்னோட இல்லைங்கற என் ஏக்கத்தை தாங்க எனக்கு சக்தி கொடுக்கிறவங்க... நான் சொன்ன ராஜகுமாரன் எனக்கு மூணாவதாப் பொறந்த பையன்... அவன் பேர் அஷ்வத்.
அஷ்வத் மத்த குழந்தைகள் மாதிரி கிடையாது... இறைவன் எனக்குன்னு விஷேசமாப் படைச்சப் பரிசு அவன். அவனுக்கு மூளை வளர்ச்சி கிடையாதுன்னு உலகம் சொல்லுது. அவனை என்னோட வச்சுப் பார்த்துக்க என்னால முடியல்ல. ஆசை இருந்தும் வசதி பத்தல்ல. அவனுக்கு அதிகமானக் கவனம் தேவைப்பட்டுச்சு. எனக்கு நேரம் போதல்ல. அதான் மனசைக் கல்லாக்கிட்டு அவனை ஒரு இல்லத்துல்லச் சேர்த்துட்டேன். அங்கே அவனை நல்லாக் கவனிச்சுகிறாங்க... அவன் சந்தோஷமா இருக்கான்.

இப்போ அவன் கிட்டார் எல்லாம் வாசிக்கிறான். ரஹ்மான் பாட்டுப் போட்டாத் துள்ளிக் குதிக்கிறான். அவன் சந்தோஷத்தைப் பார்த்து என் மனசும் ஆறுதலடையுது. வாரத்தில்ல இரண்டு நாள் அவனைப் போய் பார்க்கிறேன். ஒரு இரண்டு மணி நேரமாவது அவனோட இருக்கிறேன்.

லயாவுக்கு அவன் மேல பாசம் ஜாஸ்தி. அஷ்வத்தை யாராவது தப்பாப் பேசிட்டா அவ முகத்திலிருந்து சிரிப்புக் காணாமல் போயிடும். மாசம் ஒரு தடவை அஷ்வத்தைப் பார்க்க ரியாவும், லயாவும் என் கூட வருவாங்க.
சம்பளத் தேதியை ஒட்டி அந்தச் சந்திப்பு நடக்கும்.

அஷ்வ்த்துக்கு அவனுக்கு பிடிச்ச ஏ.ஆர்.ரஹமான் சி.டி. ரியாவுக்கு டெம்டெஷன் சாக்லேட், லயாவுக்கு கோல்ட் பிஷ் இதெல்லாம் வாங்கப் பணம் வேணுமே, அந்தப் பணம் சம்பளத்து அன்னிக்குத் தான் கிடைக்கும். அந்த ஒரு நாள் நான் என்னையே மறந்துப் போயிடுவேன். என் குழ்ந்தைகளின் ச்ந்தோஷத்துக்கு முன்னாடி என் மனசு ரெக்கை முளைச்சுப் பறக்கும்....

மத்தப்படி என் வழக்கமான வாழ்க்கை,
காலை 5 மணிக்கு ஆரம்பிக்கும்... லேசாக் கால்களில் அலை வருட பீச்சல்ல ஒரு மணி நேரம் நடப்பேன்.
ஆறு மணிக்கு போர்வைக்குள்ளே ஒளிஞ்ச்சுட்டு இருக்க என் இரண்டு குட்டி தேவதைகளையும் அவங்க உள்ளங்காலை என் விரலால வருடி எழுப்புவேன்.
அவர்களைச் சோப்புப் போட்டுக் குளிக்க வச்சு... சீவி.. சிங்காரிச்சு...ஸ்கூலுக்கு தயார் செய்வேன்.
ரியாவுக்கு முன் நெத்தியிலே ஒரு இரண்டு முடி புரள்ற மாதிரி முடி வாரி விடணும் அப்போத் தான் அவளுக்கு ச்ந்தோஷம். அந்தச் சந்தோஷத்துல்ல பச்சக்ன்னு என் கன்னத்துல்ல அழுத்தி ஒரு முத்தம் கொடுப்பாப் பாருங்க.. அந்தச் சுகம் எனக்கே எனக்காக ஆண்டவன் படைச்சது.
லயா ரொம்பச் சுத்தம் பார்ப்பா.. போடுற உடுப்புல்ல சின்ன அழுக்கு இருந்தாலும் அவ பட்டு முகம் சுருங்கிப் போயிடும்...ரொம்ப் பார்த்துத் துணியைத் துவைக்கணும் அவளுக்கு. I simply love my little angels.

அப்புறம் அவங்க கைப் பிடிச்சுட்டு ஸ்கூல்லுக்குக் கூட்டிட்டுப் போவேன். லயாவும், ரியாவும் மாறி மாறி ரைம்ஸ் சொல்லுற அந்த அழகை நான் அணு அணுவா ரசிச்சு அனுபவிப்பேன்...அப்படி ஒரு ஆனந்தம்.... அதில் இருக்கும்.
அம்மா டாட்டான்னு சொல்லிட்டு ரெண்டும் கிளாஸ் பார்த்து குடுகுடுன்னு ஓடும்.
ரியா மட்டும் யாராவது குழந்தையை அவங்க அப்பாக் கூட்டிட்டு வந்து பைக்கில்ல இருந்து இறக்கி விடுறதைப் பார்த்தா கண்கள்ல்ல ஒரு தீராத ஏக்கத்தோட அப்படியே பார்த்துகிட்டே நின்னுடுவா.
என் இதயம் அந்த வினாடிகளில் அபபடியே சுக்கு நூறா உடைஞ்சுப் போகும். கஷ்ட்டப்பட்டு என்னைக் கட்டுப்படுத்திகிட்டு ரியா கிட்டேப் போவேன். அவ கண்ணைப் பார்த்து நிதானமா அவங்க அப்பா அவளை எவ்வளவு நேசிச்சாருங்கறதைச் சொல்லுவேன். Her Dad was the best in the world ன்னு அவகிட்டே சொல்லுவேன்.
சொல்லும் போதே சில சமயம் என் கண் எனக்கேத் தெரியாம கலங்கிடும். என் கண் கலங்குறது தெரிஞ்ச உடனே லயா என் பக்கமா வந்து நின்னுக்குவா. பெரிய மனுஷி மாதிரி என் தோளை அழுத்திப் பிடிச்சுக்குவா. அவளுக்கு எல்லாம் தெரியுமோன்னுக் கூட நான் நினைப்பேன்.
"ம்மா ஒண்ணுமில்ல.. எல்லாம் சரியாப் போயிடும்"ன்னு அவ வயசுக்குரிய அந்த மழலைக் குரலில் அவச் சொல்லும் போது என் மனசு அப்படியே நெகிழ்ந்து நிக்கும்.

இரண்டு பேரையும் ஸ்கூல்ல விட்டுட்டு வீட்டுக்கு வந்துக் குளிப்பேன்... ஷ்வர்ல்ல தண்ணியைத் திறந்து விட்டுட்டு மனசு ஓயர மட்டும் அழுவேன்.... என் குழந்தைகளின் மனக்காயங்களுக்கு மருந்தாய் நான் தரும் பொய்களை நினைத்து தேம்பி தேம்பி அழுவேன்.

அவன்... ஆம் என் குழந்தைகளின் தகப்பன்.... என் கடைக்குட்டி லயா என் வயிற்றில இருக்கும் போது ஒர் இரவு என்னை ஒரேடியா உதறிட்டுப் போனதை அவங்க கிட்ட நான் எப்படி சொல்லுவேன்....
ரியாவை அவன் ஒரு நாள் கூடத் தூக்கிக் கொஞ்சாத அந்த இரக்கமற்ற செயல்களை அந்த சின்ன உயிர்களுக்கு எப்படி விவரிப்பேன்..

அவன் செத்துப் போனான்... என் பிள்ளைகளுக்கும் எனக்கும் இருக்கும் வரை எந்த நிலையிலும் அவன் அன்பு காட்டவே இல்லை.... இது தான் உண்மை.... ஆனால்... இந்த உண்மைகளை நான் அவன் என்னிக்குச் செத்தானோ அன்னிக்கே அவனோடப் புதைச்சுட்டேன்.....

என் குழ்ந்தைகளுக்கு... ஒரு அன்பான தகப்பன் தேவை.. அதை என் பொய்கள் அவர்களுக்குக் கொடுக்கும்....

என்றாவது இந்தப் பொய்களுக்கு விடைக் கொடுக்கவேண்டி இருக்கும் அது வரை எனக்கும் என் டைரிக்கும் இந்தப் பொய்கள் சுமையாய் இருந்துவிட்டு போகிறது...

ஆங்...என் பெயரைத் தெரிஞ்சுக்குற ஆவல்ல இதுவரைக்கும் பொறுமையாப் படிச்சவங்களுக்கு என் பெயர் சொல்லணும் இல்ல... என் பெயர் அம்மா... இரண்டு குட்டித் தேவதைகளின் அம்மா....கூடவே ஒரு ராஜகுமாரனுக்கும்

15 comments:

Unknown said...

ஆர்த்தி,
நீங்கக் கதையைப் பத்திக் கருத்துச் சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தேன்....

Unknown said...

Thanks for putting ur thoughts in black and white. I wish to reiterate my clarification.
I did not intend to paint the character with negative shades. But I decided to leave the flaw there itself as it will give room for readers to carry the thots of that particular character on their mind...let the readers pass the judgement...
I believe this decision of mine in no way can lead to sloppiness in my creation.
Now, what do u think of the mother?
I leave it to your thots.
Thanks

G.Ragavan said...

டிரீம்ஸ் என்ன சொல்ல வர்ரார்னு எனக்கு புரியலை. ஒரு கதை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வரையறுக்க முடியாது. சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லனும். அவ்வளவுதான். இந்தக் கதையும் ஒரு நல்ல முயற்சி. கொஞ்சம் பழகிய விஷ்யம் என்றாலும் நல்ல முயற்சி.

Anonymous said...

Hi:
Ashwath is the third child for the mother. Then how come, the father ran away when the mother is pregnant for Laya?

Am I right in this finding? Pls clarify.

sathya

Unknown said...

Sathya,

U are right in your finding.. I leave the rest to your opinion...

Unknown said...

ராகவன் வாங்க,

கச்சேரி பக்கம் உங்க குரலை அதிகம் கேட்க முடியல்லங்கற என்னோட வருத்தத்தை இங்கே வந்து ஒரளவு தீர்த்து வச்சிட்டீங்க ....

ட்ரீம்ஸ் சொல்ல வந்ததைத் தான் சத்யா சொல்லுறாங்க...
எழுதியப் பின் இந்தக் கதையை மீண்டும் படித்து விட்டு கடைசி வரியில் கடைசியில் உள்ள மூன்று சொற்களைச் சேர்த்து முடித்தேன்.....

சுருங்கச் சொல்வதாயின்... கதை எழுதத் துவங்கும் போது தட்டுப்படாத ஒரு போக்கு கதை எழுதி முடித்தப் பின் கிடைத்தது... அந்த மாற்றத்தை மிகவும் விவரிக்காமல் இருப்பது இருக்கும் படியே விட்டு படிப்பவர்களின் சிந்தனைக்கே கதையை விட்டு விடுகிறேன்.

Unknown said...

U have mistaken my explanation for sure :)

பொன்ஸ்~~Poorna said...

அன்பான இரண்டு குழந்தைகள், கொடுமைப் படுத்திய கணவனைப் பற்றித் தவறாக சொல்லாமல், நல்லதே சொல்லி வளர்க்கும் தாய்.. சின்ன உலகம், அதன் சந்தோஷங்கள், துக்கங்கள், வாய்மையிடத்த பொய்கள்.. உருக்கமான கதை தேவ்...

Unknown said...

//அன்பான இரண்டு குழந்தைகள், கொடுமைப் படுத்திய கணவனைப் பற்றித் தவறாக சொல்லாமல், நல்லதே சொல்லி வளர்க்கும் தாய்.. சின்ன உலகம், அதன் சந்தோஷங்கள், துக்கங்கள், வாய்மையிடத்த பொய்கள்.. உருக்கமான கதை தேவ்... //



நன்றி பொன்ஸ்

டிபிஆர்.ஜோசப் said...

தேவ்,

உங்க கதைக்கு வந்த ட் ரீம்ஸ் மற்றும் சத்யாவோட பின்னூட்டங்களும் அதுக்கு நீங்க குடுத்த விளக்கத்தையும் படிச்சேன்..

நீங்க சொன்ன அந்த கடைசி மூன்று சொற்களும்.. கதையின் இடையில் அந்த மூன்றாவது ராஜகுமாரன் பிறந்ததாகக் கூறப்படுவதும்..

நீங்கள் கதையை படிப்பவர்களின் thoughtsக்கே விட்டுவிடுகிறேன் என்பதும்..

நீங்கள் தேவதை பீடத்தில் வைக்க முயன்ற அம்மா பாத்திரத்தை கீழே தள்ளிவிட்டதுபோல் தோன்றுகிறதே தேவ்..

டிபிஆர்.ஜோசப் said...

மேலும் தேவ்..

சாதாரணமாக ஒரு சிறுகதையை எழுத துவங்கும் முன்னரே முடிவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துக்கொண்டுதானே எழுதுவீர்கள்..

கதையின் ஒட்டத்திற்கேற்ப அதன் போக்கு மாறுபடுவது ஒரு தொடருக்கு வேண்டுமானால் பொருந்தலாம் தேவ்..

சிறுகதையில் அதை நுழைக்கும்போது பிசிறு தட்டுகிறதே..

அதை நீங்கள் தவிர்த்திருக்கலாம் என்றே நினைக்கிறேன்..

இருப்பினும் இது உங்கள் கற்பனை.. அதில் என்ன செய்யவும் உங்களுக்கு உரிமையிருக்கிறது..

Anu said...

Hi Dev,
A nice short story.
A mother who takes pride in calling herself a mother who even forgets her name for her childs happiness. Its so realistic.

Unknown said...

//தேவ்,

உங்க கதைக்கு வந்த ட் ரீம்ஸ் மற்றும் சத்யாவோட பின்னூட்டங்களும் அதுக்கு நீங்க குடுத்த விளக்கத்தையும் படிச்சேன்..

நீங்க சொன்ன அந்த கடைசி மூன்று சொற்களும்.. கதையின் இடையில் அந்த மூன்றாவது ராஜகுமாரன் பிறந்ததாகக் கூறப்படுவதும்..

நீங்கள் கதையை படிப்பவர்களின் thoughtsக்கே விட்டுவிடுகிறேன் என்பதும்..

நீங்கள் தேவதை பீடத்தில் வைக்க முயன்ற அம்மா பாத்திரத்தை கீழே தள்ளிவிட்டதுபோல் தோன்றுகிறதே தேவ்..//

டிபிஆர் சார் நீங்க இந்த பதிலைப் பார்ப்பீங்களான்னு கூட எனக்குத் தெரியல்ல... கிட்டத் தட்ட ஒரு வருடத்துக்குப் பின் வரும் பதில் இது...

இந்தக் கதை ஒரு அம்மாவின் டைரி குறிப்பு..அவ்வளவு தான்.. அன்பான அம்மாவுக்கு மூன்று குழந்தைகள்...அந்தக் குழந்தைகளின் பிறப்பு அதிலும் அந்த சிறுவன் பிறப்பு குறித்த சர்ச்சைகளே பின்னூட்டங்களில் பிரதானமாய் ஒலிக்கிறது..அதற்கானப் பதில் நிச்சயமாய் இந்தக் கதையில் இருக்காது...சொல்ல வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல...

அம்மாவாக அவள் தன் குழந்தைகளுக்கு எந்த குறையும் வைக்கவில்லை என்பதை இந்த டைரிக் குறிப்பு சொல்லுகிறது..அம்மாவாக அவள் தேவதை பீடத்தில் வீற்றிருக்கிறாள் தானே...

Unknown said...

//tbr.joseph said...
மேலும் தேவ்..

சாதாரணமாக ஒரு சிறுகதையை எழுத துவங்கும் முன்னரே முடிவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று முடிவு செய்துக்கொண்டுதானே எழுதுவீர்கள்..

கதையின் ஒட்டத்திற்கேற்ப அதன் போக்கு மாறுபடுவது ஒரு தொடருக்கு வேண்டுமானால் பொருந்தலாம் தேவ்..

சிறுகதையில் அதை நுழைக்கும்போது பிசிறு தட்டுகிறதே..

அதை நீங்கள் தவிர்த்திருக்கலாம் என்றே நினைக்கிறேன்..

இருப்பினும் இது உங்கள் கற்பனை.. அதில் என்ன செய்யவும் உங்களுக்கு உரிமையிருக்கிறது..//

சிறுகதைக்கான இலக்கணத்தை இந்தப் பதிவு மீறுகிறதா? இல்லை அந்த இலக்கணப் படி தான் உள்ளதா என்று உங்கள் கேள்வி அமையுமாயின் அதற்கானப் பதில் எனக்குத் தெரியாது...ட்ரீம்ஸ் குறிப்பிட்டுள்ள கதாபாத்திரத்தின் குறையைப் பற்றி நான் எந்தவிதக் கருத்தும் சொல்லமால் அதைப் படிப்பவரின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன் என்று தான் சொல்லுகிறேன்...

ஒரு தாயாக அவள் குறையற்றவள்... அந்த ஒரு பக்கத்தை அழுத்தமாகப் பதிவு செய்ய முயன்றுள்ளேன்... ஆனால் படிக்கும் எல்லாருக்கும் அந்த தாயின் சிறப்பை விட இந்த ஒரு விசயம் குறையாகத் தெரிகிறது அவ்வளவே

Unknown said...

//Anitha Pavankumar said...
Hi Dev,
A nice short story.
A mother who takes pride in calling herself a mother who even forgets her name for her childs happiness. Its so realistic.//

Thank you Anitha :)