Sunday, October 21, 2007

ஒரு குட்டிச் சுவரின் வரலாறு - 4

முந்தையப் பகுதி

போலீஸ் ரோந்து வண்டியின் முன் கண்ணாடியை இறக்கிய இன்ஸ்பெக்டர் எங்களை ஏற இறங்க பார்த்தப் பார்வையில் உள்ளுக்குள் தேக்கி வச்சிருந்த மொத்த தைரியமும் கரைந்து கண் முன்னே கடலில் கலக்க கட்டுக்கடங்காமல் பாய்ந்தது...

"என்னப் பண்ணுறீங்க,,இந்த் நேரத்துல்ல இங்கே?" அவர் கேள்வி கேட்டு விட்டார் ரொம்ப சுலபமா,,அவுட் சிலபசில் பரீச்சையில் கேள்வி கேட்டால் எப்படி முழி பிதுங்கி முன்னால் வருமோ அதே மாதிரி ஒரு நிலைமை...மேல் உதடு கீழ் உதட்டோடு ஓட்டிக் கொண்டது எனக்கும் குமாருக்கும்..அவரவர் உதடு அவரவர் உதட்டோடுத் தான் ஒட்டிக்கொண்டது என்பதையும் இங்கேயேத் தெளிவு படுத்திவிடுகிறேன்..

"என்னப் பதிலைக் காணும்...?" கூட வந்தக் காவலர் ஏத்திவிட...

"இது யார் பைக்?" இன் ஸ்பெக்டர் அடுத்தக் கேள்வியைக் கேட்டார்.

"சார்... எங்க பைக் தான் சார்... மழை பெய்யுது அதான் பைக் எடுக்கமுடியாம கார்ல்ல வெயிட் பண்றோம் சார்..." கொஞ்சம் கொஞ்சமாய் வார்த்தைகளை இழுத்து சொன்னோம்...

"பைக் மட்டும் தான் காரணமா.. இல்ல பேரல்ஸும் காரணமா?" இன்ஸ்பெக்டர் தம்ஸ் அப் சிம்பளை வாயில் கவுத்திக் கேட்டார்...

"இல்ல சார் நான் வேணும்ன்னா ஊதி காட்டவா?" எஞ்சிய தைரியத்தில் வார்த்தைகள் வழிந்தெழுந்தன..

"நீ ஊதி எல்லாம் காட்ட வேணாம்.. ஊத்தி கொட்டனதே அங்கே பக்கத்துல்ல தான் கிடக்குது...அதுவே எல்லாத்தையும் சொல்லிருச்சு.." இன்ஸ்பெக்டர் கைக் காட்டிய இடத்தில் ரெண்டு காலி பீர் பாட்டில்கள் மழையில் நனைந்தப் படி ஒன்றோடு ஒன்று உரசியப் படி ரொமான்ஸ் சீன் காட்டிக் கொண்டிருந்தன.. எங்களுக்கு ஆக்ஷ்ன் சீன் கன்பர்ம் ஆகி கொண்டிருந்தது...

"எந்த காலேஜ்?"

"சார் சாரி சார்...பிரண்ட்க்கு பர்த்டே அதான்...."

"யாருக்கு பர்த்டே?" இன் ஸ்பெக்டர் கேட்க."இவனுக்கு" எனப் பதிலாய் ரெண்டு குரல்கள் கேட்டன. ஒண்ணு என்னுது நான் சொன்ன இவன் குமார். இன்னொரு குரல் குமாருடையது அவன் சொன்ன இவன் நான்...

அப்புறம் என்ன... ஒரே ஸ்டார்ட் மீசிக் தான்...

இன்ஸ்பெக்டர் வீட்டு தங்கமணி அன்னிக்கு அவருக்குப் பிடிச்ச கருவாட்டு குழம்பைப் பக்குவமா வச்சு ஊத்தியிருக்காங்கப் போல...நாங்க கருவாடா ஆகாம தப்பிச்சோம்...தங்கமான மனுசன் அட்வைஸ் மழைப் பொழிஞ்சதோட விட்டு அனுப்பிட்டார்...அவர் அட்வைஸ் மழை பொழியறதை நிறுத்தவும் மழையும் கொஞ்சம் நின்னுச்சு...

"தம்பிகளா.. இனி நான் உங்களைப் பீச் பக்கம் இப்படி பார்த்தேன்... அவ்வளவு தான் சொல்லிட்டேன்..." ஜீப் போனது... எங்களுக்கு மூச்சு வந்தது...

எல்லாம் முடிந்ததும் எழுந்து வந்த திருமா...

"சீனியர்... யார் சீனியர் அந்த அங்கிள் .. ரொம்ப நேரமா உங்ககிட்ட பேசிகிட்டு இருந்தார்.. எதாவது பிரச்சனையா சீனியர்.. சொல்லுங்க.. உங்க அங்கிள் நம்ம அங்கிள்.. கூட்டத்தோடு களம் இறங்கிருவோம்" அப்ப்டின்னு சொல்லிகிட்டேக் குட்டிச் சுவர் பக்கம் தேங்கியிருந்த குளத்தில் மல்லாக்க விழுந்தான்.

அதுக்கு அப்புறம் ஒரு ரெண்டு வாரத்துக்கு நாங்க யாரும் குட்டிச் சுவர் பக்கம் போகல்ல.. ஜூனியர்ஸ்க்கு இன்டஸ்டிரீயல் ட்ரிப் எங்களுக்கு புராஜக்ட் ஓர்க் பைனல் பேஸ்ன்னு ஒரே பிசி. குட்டிச் சுவருக்கு போறதுக்கு எங்க யாருக்கும் நேரமில்ல..

அன்னிக்கு குட்டிச் சுவருக்கு மறுபடியும் போக வேண்டிய சூழ்நிலை உருவாச்சு...காரணம் சோழன்..

வழக்கம் போல இன்னொரு காதல்...சோழனுக்கு காதல் வரும்ன்னு யாராவது எங்கிட்ட பந்தயம் வச்சிருந்தா என் மொத்தச் சொத்தையும் எழுதி தர்றதா பந்தயம் வ்ச்சிருப்பேன்.. ( சொத்துக் கணக்கு கேக்கறவங்க கிட்ட பந்தயம் வைக்கிறதுல்ல)

"மாப்பி.. நான் கல்யாணம் பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்டா...." சோழன் சொன்னதும் ஓ போட்டு அவனை அப்படியே கட்டிப் பிடிச்சு முதல் வாழ்த்து சொன்னது நான் தான்.

"மச்சான் முத்தப்பர் சரியான யோசனைக்கார பெரிய மனுசர்டா... மாட்டை இனியும் சும்மா விட்டா ஊர்ல்ல ஒரு வயக்காடும் வெளங்காதுன்னு வெவரமாப் புரிஞ்சிகிட்டு மூக்கணாம் கயித்தை ரெடி பண்ணிட்டாரு போல.." குமார் சொன்னான்.

"பொண்ணு சொந்தமா?" சபரி கேட்டான்.

"பேர் என்ன?" மணி கேட்டான்

"பேர் நித்யா"

"படிப்பு நம்மளை விட கம்மியா? அதிகமா?" நான் கேட்டேன்.

"படிப்பு நம்ம எம்.பி.ஏ தான்"

"என்னது நித்யா எம்.பி.ஏவா இது முத்தப்பர் வீசுற முக்கணாம் கயிறு மாதிரி தெரியல்லயே... சொந்தமா தயாரிச்ச தூக்கு கயிறு மாதிரி இல்ல இருக்கு?" நான் கேட்டதும் சோழன் முகம லேசாய் மாறியது.

" நம்ம கிளாஸ் நித்யாவா... அந்த பெங்களூர் பொண்ணாடா?" மணி வாய் விட்டு அதிர்ச்சியாய் கேட்டான்.

"இரு மாப்பி டென்சன் ஆவாதே... நீ அவளை லவ் பண்ற மாதிரி மாப்பிக்கும் அவளை லவ் பண்ண உரிமை இல்லையா.. உடனே அதிர்ச்சி ஆனா எப்படி?" நான் கேட்டேன்.

"நான் சீரியசாச் சொல்லிகிட்டு இருக்கேன்..." சோழன் பேசினான்.

அதே சமயம் ஜூனியர் கோஷ்ட்டியும் அங்கே திருநாவின் காரில் வந்து இறங்கியது.

காரைக் கவுரி சங்கர் ஓட்டிக் கொண்டு வந்தான்.

"என்ன கவுரி..இப்போ ரோட் கன்ட்ரோல் வந்துருச்சா.. ஓ,கேவா?" பேச்சு சோழன் காதல் விவகாரத்தில் இருந்து கொஞ்சம் திசை மாறியது..

"புது வண்டி எப்போ எடுக்கப் போற...?"

"அப்பா மாருதி சென் புக் பண்ணிட்டார்... இன்னும் இரண்டு வாரத்துல்ல எடுக்கப் போறோம்... எடுத்துட்டு அப்பாவும் நானும் சென்னைக்கு வர்றோம்... அம்மா தங்கச்சி எல்லாரும் இங்கேயிருந்து கிளம்பி திருப்பதிக்கு ஒரு ட்ரிப் போறதாப் பிளான் சீனியர்" கவுரி சொன்னான்.

"கவுரி உங்க ரோட் ட்ரிப் முடிஞ்சதும் நாம போறோம்... மொத்த ஜமாவும் கிளம்புறோம்.. கொடைக்கானல் போறோம் காட்டேஜ்ல்ல ரூம் போடுறோம்.. கூத்து கட்டுறோம்.. ஓ,கே"

"கண்டிப்பா சீனியர்.. நீங்க கேக்கவே வேணாம்..என் கார் உங்க கார் சீனியர்" கவுரி சிரிப்பும் சந்தோசமாய் சொன்னான்

"என்ன சீனியர் ரோட் கன்ட்ரோல் வந்துருச்சான்னு கேக்குறீங்க...வராதா சீனியர்... சொல்லிக் கொடுக்கரது யார்...பட்டுக்கோட்டை ஷூமேக்கர் திருநாவாச்சே..."

"பட்டுக்கோட்டை பிரபாகர் தெரியும்..இந்த ஷூமேக்கர் யார்டா மாப்பி அவருக்கு உறவா?" ஜமான் நிஜமாலுமே தெரியாமல் கேட்டான்.

"ஷூமேக்கர் தெரியல்ல உனக்கு... எத்தனை வருசமாடா கார்ல்ல போற.. வெளக்கெண்ணெய் உனக்கெல்லாம் பொண்ணு செட் ஆவுது பாரு... அதுவும் ஷாலினி உனக்கு செட் ஆயிட்டாளே" தன் வயித்தெரிச்சலை பொங்க விட்டான் திருநா

"நிறுத்து... உனக்கு கில்பர்ட் ரோட்ரிக்ஸ் தெரியுமா...?"

"என்னது? யார் அது?" திருநா ஜெர்க் அடித்து நிற்க...

"நீ பொறந்ததுல்ல இருந்து கார்ல்ல தானே போறே.. உனக்கு கில்பர்ட் ரோட்ரிக்ஸைத் தெரியல்லங்கற...அதுவும் தஞ்சாவூர்காரன்ன்னு வேற வெக்கம் இல்லமா வெளியே சொல்லிகிட்டு திரியறயே வெங்கல்ம்"

"சரி அது யார்டா?..சொல்லு எனக்குத் தெரியாத கில்பர்ட்..?"

கில்பர்ட் அண்ணேன் எங்கப் பக்கத்து தெருவுல்ல கார் மெக்கானிக் செட் வச்சிருக்கார்... எங்க ஏரியாவுல்லேயே பெரிய மெக்கானிக்டி மாப்பி...

கடுப்பான திருநா இறங்கி ஜமானைத் துரத்த ஜமான் மண்ணில் இறங்கி ஓடினான்..

"சீனியர் கடல்ல குளியல் போட்டு எவ்வளவு நாள் ஆச்சு.. போட்டுருவோமா.. மணி நாலு தானே ஆவுது.." முஸ்தபா எடுத்துச் சொல்ல... எல்லாருக்கும் அது நல்ல யோசனையாகப் பட்டது,,, சரசரவெனக் கடலை நோக்கி ஓடினோம்...

"எருமை...வருதுடோய்...." கடைசியாய் ஜமான் குதித்தப் போது ஜூனியர்ஸ் கோரசாய் கத்தினார்கள்.

சோழன் கரையோரம் ஒதுங்கி தம்மை பற்ற வைத்து புகையை வளையம் வளையமாய் விட ஆரம்பித்தான்.

"சோழருக்கு என்னாச்சு?" கவுரி கேட்டான்.

"எத்தனைத் தமிழ் படம் பாத்துருப்ப இப்படி கேக்குற,,, பிரச்சனை வந்துருச்சாம் அதான் பீல் பண்ணுறாராம்...அதான் புகையா விட்டு பீலிங்கை பில் டப் பண்ணுறார்.." குமார் சொன்னான்

"லவ்வா?" கவுரி கேட்டான்.

"ஆமா" குமார் சொன்னான்.

"பொண்ணு யார்?"

"எங்க கிளாஸ் பொண்ணு தான்.... நீ கூடப் பாத்து இருப்ப....அந்த பெங்களூர் பார்ட்டீப்பா"

"யார் நித்யாவா சீனியர்... " கவுரி நமுட்டுச் சிரிப்புச் சிரித்தான்..

"ஆமா நீ சிரிக்கிறது புரியுது... பொண்ணுக்கு தமிழ் சுத்தமாத் தெரியாது... நம்ம ஆளுக்கு கன்னடம் கொத்தில்லா.. ரெண்டுக்கும் இங்கீலிஷ் சோ சோ ட்ரபிள்... இதுல்ல என்ன மண்ணுல்ல லவ் வந்துச்சோ.... நம்ம சோழன் லவ் பத்தி தெரியாது... பிக் அப்... ட்ராப்... எஸ்கேப்..." நான் சொல்லிச் சிரித்தேன்...

"அதுக்கு ஏன் இவ்வளவு பில்டப் கொடுக்குறார் சோழர்?"

"அதானே கூப்பிட்டேக் கேட்டுருவோம்... டேட்டிங்.... செட் ஆகல்லன்னா ரெண்டு கட்டிங்ன்னு இல்லாம எக்ஸ்ட்ராவா நாலு சிகரெட்டை வேஸ்ட் பண்ணுறானே... " குமார் சொல்லிக் கொண்டே எழுந்து சோழனை நோக்கி போனான்.

நாங்கள் அலைகளில் குதித்து விளையாடிக் கொண்டிருந்தோம்.. அலையும் அதிகமில்லை....

"டேய் என் மானம் கப்பலேறிடும்டா.. உருவனவன் ஒழுங்காக் கொடுத்துருங்கடா..." ஜமான் குரல் பெரிதாய் ஒலித்தது...திருநா சிரித்தப் படி வேகமாய் உள் நீச்சல் போட்டான்...

"டேய் இப்படியே எந்தரிச்சி போய் உன் கார்ல்ல உக்காந்துருவேன்டா..உருவனதைக் கொடுத்துடுடா" ஜமான் அடுத்த எச்சரிக்கை கொடுத்தான். அதுக்கும் திருநா மசியவில்லை.

"உங்காரை இன்னிக்கு பெட்ரோல் ஊத்தி கொளுத்துறேன் பாருடா.. ஜமான் எழுந்திரிக்கப் போனான்.

அப்போது கரையோரமாய் சோழனுக்கும் குமாருக்கும் நடந்த வாக்குவாதத்தை நாங்கள் யாரும் கவனிக்கவில்லை.. ஜமானைக் கலாய்ப்பதில் மொத்த ஜமாவும் கவனம் செலுத்திக் கொண்டிருந்தோம். நான் தான் எதேச்சையாய் கரைபக்கமாய் முதலில் என் பார்வையைத் செலுத்தினேன்..

அங்கு எதோ சரியில்லை என்று எனக்குப் படவே எழுந்து விழுந்து கரையை நோக்கி ஓடினேன்.

நான் கரையை அடையவும் குமாரைச் சோழன் பிடித்து மண்ணில் தள்ளிவிடவும் சரியாக இருந்தது...நான் குமாரைத் தூக்கி அவன் தோளில் இருந்த மண்ணைத் தட்டி விட்டேன். இதற்குள் மொத்த ஜமாவும் பதறியடித்து கரையேறி இருந்தார்கள்.. சோழன் உச்சக் கட்டக் கோபத்தில் இருந்தான்..என்னால் அதை நல்லாவே உணர முடிந்தது.. குமார் எதுவும் பேசாமல் மெதுவாய் என் கையை உதறி விட்டு திரும்பி நின்றான். எனக்கு என்ன நடந்திருக்கும் என சரியாக யூகிக்க முடியவில்லை... என்னப் பேசுவது என்ற குழப்பத்தோடு நின்றேன்.

என்னைப் போலவே எல்லாரும் அதிர்ச்சியில் நின்றார்கள். ஐந்து வருட கால நண்பர்கள் மண்ணில் உருண்டு புரண்டால் யாருக்குத் தான் அதிர்ச்சி வராது...

கவுரி தான் முதலில் பேசினான்.

"சீனியர்..என்ன இது...?"

"டேய் நீ பேசாத.. சின்னப்பையன்.... உனக்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு விருப்பமும் இல்ல தேவையும் இல்ல...மேல பேசுன அசிங்கமாப் போயிரும்..." சோழன் வார்த்தைகளில் அனல் தெறித்தது.

"சோழா... மாப்பி...பிரச்சனை என்னவா இருந்தாலும் கை நீட்டுறது சரியில்லடா மாப்பி.. வா பேசலாம்.." அவன் தோளில் நான் கையைப் போட்டேன்...

என் கையை ஓங்கி தள்ளியவன் ஆத்திரத்தோடு வந்து என் சட்டையைப் பிடிச்சான்

"டேய் மெட்ராஸ் புத்தியைக் காட்டிட்டீயேடா.... ஊர்காரப் பைய ஒருத்தன் இங்கே வந்து லவ் பண்ணக் கூடாதா? உன்னிய நண்பன்னு நினைச்சு என் காதலை... என் மனசைத் தொறந்துச் சொன்னா..அதை ஊரையேக் கூட்டி வச்சு நக்கல் பண்ணுறீயா.... த்தூ.... மனுசனடா நீ எல்லாம்... பழகிட்டேன்... உன் வீட்டுல்ல ரெண்டு நாள் சாப்பிட்டுட்டேன்டா அந்த காரணத்துக்காக இத்தோட நிறுத்திக்கிறேன்...." என் சட்டையை விட்டுக் கையை எடுத்தான். சோழன் கண்களில் ஆத்திரம்...கோபம் ..வெறி... எரிச்சல்.. எல்லாம் சேர்ந்த ஒரு வலி தெரிந்தது..

"டேய் குமாரு நல்லாயிருடா.. ஊர் பாசம் உனக்கும் இல்லாம போயிருச்சு இல்ல... இந்த மெட்ராஸ்காரனோடச் சேந்து நீயும் என்னை ஓட்டுற இல்ல.....இனி எனக்கும் உங்களுக்கும் எந்த சகவாசமும் இல்லடா.... மயிராப் போச்சு போங்கடா..." சோழன் கால்கள் தள்ளாட நடந்து குட்டிச் சுவரைத் தாண்டி நடந்துப் போனான்.

அதன் பின் யாரும் அங்கு எதுவும் பேசவில்லை.. குட்டிச் சுவரில் வெகு நேரம் வரை அப்படியே அமர்ந்து விட்டு சொல்லிக்கொள்ளாமல் எல்லாரும் கலைந்துப் போனார்கள்.. எனக்கு வாய் விட்டு கத்த வேண்டும் போலிருந்தது....

டேய் மாப்பி.... சட்டையிலே கை வச்சிட்டியேடா.... பதில் சொல்லுறேன்டா.. மனசுக்குள்ளேச் சொன்னாலும்... மொத்தத்தில் உடைந்து தான் போயிருந்தேன் நானும்...

இன்னும் வரும்

18 comments:

குசும்பன் said...

"ஒண்ணு என்னுது நான் சொன்ன இவன் குமார். இன்னொரு குரல் குமாருடையது அவன் சொன்ன இவன் நான்..."

ஹா ஹா:)))

முத்தப்பர் வீசுற முக்கணாம் கயிறு மாதிரி தெரியல்லயே... சொந்தமா தயாரிச்ச தூக்கு கயிறு மாதிரி இல்ல இருக்கு?"////

நண்பர் எல்லோரும் சொல்லும் டயலாக் போல இது:)

கோபிநாத் said...

\\டேய் மாப்பி.... சட்டையிலே கை வச்சிட்டியேடா.... பதில் சொல்லுறேன்டா.. மனசுக்குள்ளேச் சொன்னாலும்... மொத்தத்தில் உடைந்து தான் போயிருந்தேன் நானும்...

இன்னும் வரும்\\

அண்ணே நல்லா போட்டிங்க இடைவேளையை...சீக்கிரம் பதிலை சொல்லுங்கண்ணே.

நாகை சிவா said...

பூசல் இல்லாத நட்பா...அதுவும் பொம்பளை புள்ளையால் வராத பூசலா...

சான்ஸ்சே இல்ல...

நீங்க அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க..

நாமக்கல் சிபி said...

/அண்ணே நல்லா போட்டிங்க இடைவேளையை...சீக்கிரம் பதிலை சொல்லுங்கண்ணே.
//

ரிப்பீட்டேய்!

siva gnanamji(#18100882083107547329) said...

பரவாயில்லையே! நேற்றையப்
பின்னூட்டத்திற்கு இன்றே பலன்
கிடச்சுட்டதே!
தேங்க்ஸ்

G.Ragavan said...

:) எதைக் கிண்டல் செஞ்சாலும் சரி.. காதலைக் கிண்டலடிக்கலாம :) அதான் இப்பிடி...

அப்புறம்..ஏன் கருவாட்டுக் கொழம்பை நெனைவு படுத்துனீங்க? சென்னைக்கு வரும் போது.. ஒங்க வீட்டுக்கு வருவேன். கண்டிப்பா கருவாட்டுக் கொழம்பு இருக்கனும். கண்டிசனாச் சொல்லீட்டேன்.

Divya said...

\"தம்பிகளா.. இனி நான் உங்களைப் பீச் பக்கம் இப்படி பார்த்தேன்... அவ்வளவு தான் சொல்லிட்டேன்..." ஜீப் போனது... எங்களுக்கு மூச்சு வந்தது...\"

இவ்வளவு இஸியா விட்டுட்டாரா இன்ஸ்பெக்டர்? சே சுத்த வேஸ்ட் இன்ஸ்பெக்டர்.

\டேய் மாப்பி.... சட்டையிலே கை வச்சிட்டியேடா.... பதில் சொல்லுறேன்டா.. மனசுக்குள்ளேச் சொன்னாலும்... மொத்தத்தில் உடைந்து தான் போயிருந்தேன் நானும்.../

ஜாலியா போய்க்கொண்டிருந்த உங்கள் குட்டி சுவர் அனுபவம், இப்போ கொஞ்சம் ஸீரியசாகின மாதிரி இருக்குது,

அடுத்து என்னாச்சு, சோழன் மறுபடியும் குட்டி சுவருக்கு வந்தாரா??
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க அண்ணா!

வெட்டிப்பயல் said...

superaa poaguthu thalaiva...

Eagerly waiting for the next part...

அனுசுயா said...

//அவுட் சிலபசில் பரீச்சையில் கேள்வி கேட்டால் எப்படி முழி பிதுங்கி முன்னால் வருமோ அதே மாதிரி ஒரு நிலைமை...மேல் உதடு கீழ் உதட்டோடு ஓட்டிக் கொண்டது எனக்கும் குமாருக்கும்..அவரவர் உதடு அவரவர் உதட்டோடுத் தான் ஒட்டிக்கொண்டது என்பதையும் இங்கேயேத் தெளிவு படுத்திவிடுகிறேன்..//

கலக்கல் காமெடிங்க ஆரம்பத்துல ஆனா கடைசில கொஞ்சம் ட்ராஜடியா இருக்கே. அடுத்த பதிவுல மாத்துங்க ட்ராஜடிய :)

Unknown said...

//குசும்பன் said...
"ஒண்ணு என்னுது நான் சொன்ன இவன் குமார். இன்னொரு குரல் குமாருடையது அவன் சொன்ன இவன் நான்..."

ஹா ஹா:)))

முத்தப்பர் வீசுற முக்கணாம் கயிறு மாதிரி தெரியல்லயே... சொந்தமா தயாரிச்ச தூக்கு கயிறு மாதிரி இல்ல இருக்கு?"////

நண்பர் எல்லோரும் சொல்லும் டயலாக் போல இது:)//

கதையும் வாழ்க்கையும் பக்கம் பக்கம் தானே..இதுல்ல இருக்கது அதுல்ல வரும் அதுல்ல இருக்கது இதுல்ல வரும் கொஞ்சம் கூடக் கொறைய இருக்கும் அவ்வளவு தான் :)

Unknown said...

//கோபிநாத் said...
\\டேய் மாப்பி.... சட்டையிலே கை வச்சிட்டியேடா.... பதில் சொல்லுறேன்டா.. மனசுக்குள்ளேச் சொன்னாலும்... மொத்தத்தில் உடைந்து தான் போயிருந்தேன் நானும்...

இன்னும் வரும்\\


பதில் சொல்லியாச்சு கோபி போய் பாருங்க!
அண்ணே நல்லா போட்டிங்க இடைவேளையை...சீக்கிரம் பதிலை சொல்லுங்கண்ணே.//

Unknown said...

//நாகை சிவா said...
பூசல் இல்லாத நட்பா...அதுவும் பொம்பளை புள்ளையால் வராத பூசலா...

சான்ஸ்சே இல்ல...

நீங்க அடுத்த பதிவ சீக்கிரம் போடுங்க..//

ரைட்டு தான் சிவா.. அடிச்சாலும் பிடிச்சாலும் நண்பன் நண்பன் தான் :)

Unknown said...

//நாமக்கல் சிபி said...
/அண்ணே நல்லா போட்டிங்க இடைவேளையை...சீக்கிரம் பதிலை சொல்லுங்கண்ணே.
//

ரிப்பீட்டேய்!//
கோபிக்கே ரீப்பிட்டா :-)

Unknown said...

//siva gnanamji(#18100882083107547329) said...
பரவாயில்லையே! நேற்றையப்
பின்னூட்டத்திற்கு இன்றே பலன்
கிடச்சுட்டதே!
தேங்க்ஸ்//

அய்யா அடுத்தப் பதிவுக்கும் கொஞ்சம் தாமதம் ஆகிருச்சு.... ஆனாலும் ரிலீஸ் பண்ணியாச்சு..பார்த்துச் சொல்லுங்க.

Unknown said...

//G.Ragavan said...
:) எதைக் கிண்டல் செஞ்சாலும் சரி.. காதலைக் கிண்டலடிக்கலாம :) அதான் இப்பிடி...

அப்புறம்..ஏன் கருவாட்டுக் கொழம்பை நெனைவு படுத்துனீங்க? சென்னைக்கு வரும் போது.. ஒங்க வீட்டுக்கு வருவேன். கண்டிப்பா கருவாட்டுக் கொழம்பு இருக்கனும். கண்டிசனாச் சொல்லீட்டேன்.//

கரெக்ட் ஜிரா.. ஆனா எதுவுமே பட்டாத்தானே விளங்குது..

கண்டிப்பா வாங்க கருவாட்டுக் கொழம்பு வச்சுருவோம் உங்களுக்கு :-)

Unknown said...

//Divya said...
\"தம்பிகளா.. இனி நான் உங்களைப் பீச் பக்கம் இப்படி பார்த்தேன்... அவ்வளவு தான் சொல்லிட்டேன்..." ஜீப் போனது... எங்களுக்கு மூச்சு வந்தது...\"

இவ்வளவு இஸியா விட்டுட்டாரா இன்ஸ்பெக்டர்? சே சுத்த வேஸ்ட் இன்ஸ்பெக்டர்.

\டேய் மாப்பி.... சட்டையிலே கை வச்சிட்டியேடா.... பதில் சொல்லுறேன்டா.. மனசுக்குள்ளேச் சொன்னாலும்... மொத்தத்தில் உடைந்து தான் போயிருந்தேன் நானும்.../

ஜாலியா போய்க்கொண்டிருந்த உங்கள் குட்டி சுவர் அனுபவம், இப்போ கொஞ்சம் ஸீரியசாகின மாதிரி இருக்குது,

அடுத்து என்னாச்சு, சோழன் மறுபடியும் குட்டி சுவருக்கு வந்தாரா??
சீக்கிரம் அடுத்த பகுதி போடுங்க அண்ணா!//

திவ்யா நாங்களே எதோ தப்பிச்சோம்ன்னு இருந்தா... உனக்கு ஏன்ம்மா இவ்வளவு வருத்தம்.:-)

அப்புறம் உன்னோடக் கேள்விக்கு விடை எல்லாம் அடுத்தப் பாகத்துல்ல வருது பாரு

Unknown said...

//வெட்டிப்பயல் said...
superaa poaguthu thalaiva...

Eagerly waiting for the next part...//

நன்றிங்க மாப்பிள்ளை சார் :-)

Unknown said...

//அனுசுயா said...
//அவுட் சிலபசில் பரீச்சையில் கேள்வி கேட்டால் எப்படி முழி பிதுங்கி முன்னால் வருமோ அதே மாதிரி ஒரு நிலைமை...மேல் உதடு கீழ் உதட்டோடு ஓட்டிக் கொண்டது எனக்கும் குமாருக்கும்..அவரவர் உதடு அவரவர் உதட்டோடுத் தான் ஒட்டிக்கொண்டது என்பதையும் இங்கேயேத் தெளிவு படுத்திவிடுகிறேன்..//

கலக்கல் காமெடிங்க ஆரம்பத்துல ஆனா கடைசில கொஞ்சம் ட்ராஜடியா இருக்கே. அடுத்த பதிவுல மாத்துங்க ட்ராஜடிய :)//

வாங்க அனு ட்ராஜிடி எல்லாம் லேது.. ஒன்லி காமெடி அடுத்தப் பாகம் படிங்க...:-)